சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீண்டும் தாமதம்!
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தோற்றியிருந்தனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் அழகியல் கற்கைகளை தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு செயன்முறை பரீட்சைகள் நடத்தப்பட வேண்டியுள்ளன.
தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அந்தச் செயற்பாடுகளில் இருந்தும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் விலகியுள்ளன.