காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு

dead

காதலுக்கு மறுப்பு – இளைஞன் உயிர்மாய்ப்பு

தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மறுத்ததால் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றதில் காதலன் உயிரிழந்ததுடன் காதலி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மச்சான், மச்சாள் உறவுமுறைகொண்ட 19 வயது ஆண் ஒருவரும் 17 வயதுப் பெண் ஒருவருமே காதலித்து வந்துள்ளனர். குடும்பப் பகைமை காரணமாக இருவர்களது காதலைப் பெற்றோர் ஏற்கவில்லை.

இதனால் விபரீத முடிவு எடுத்து இருவரும் விசமருந்து குடித்ததில் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலன் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Exit mobile version