யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!

Dead Body 1200px 22 12 18

யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தை, ஒருநாள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) தனது தாயாரின் வீட்டில் இருந்தபோது திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளார் என்று தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version