இலங்கையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன: ஆயுதக் கடத்தலுக்கு இராணுவ முகாம் தொடர்பை அமைச்சர் உறுதிப்படுத்தினார்!

download 1

இலங்கையில் திட்டமிட்ட குற்றக்குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், இந்த ஆண்டில் இதுவரையில் 1947 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (அக்டோபர் 23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆயுதக் கடத்தல் மற்றும் தொடரும் அச்சுறுத்தல்:

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக்குழு வலையமைப்புகளின் முக்கிய அங்கமாக ஆயுதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குற்றக்குழுக்களிடம் இன்னும் ஆயுதங்கள் இருப்பதால், நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் கூறினார்.

மேலும், முன்னதாக இராணுவ முகாமொன்றிலிருந்து ரீ-56 ரகத்தைச் சேர்ந்த 78 துப்பாக்கிகள் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதில், அதிகாரிகள் இதுவரை 36 துப்பாக்கிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் திட்டமிட்ட குற்றக்குழு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை அரசாங்கம் வேரறுக்கும் எனவும், இந்த நோக்கத்திற்காக, முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Exit mobile version