யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக நேற்றுப் புதன்கிழமை (நவம் 26) இரவு உயிரிழந்துள்ளான்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி சிறுவனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவரது தாயார் வீட்டிலேயே கை வைத்தியம் செய்துள்ளார்.
காய்ச்சலின் வீரியம் அதிகரித்ததால், நவம்பர் 25ஆம் திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
மேலதிக சிகிச்சைக்காக நவம்பர் 26ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டான். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடல் கூற்றுப் பரிசோதனைகளில், எலிக்காய்ச்சல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

