2021ல் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பெறுமதி 16 பில்லியன் !!!

Drug arrest

கடந்த 2021ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 15.86 பில்லியன் பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

74 சந்தர்ப்பங்களில் 1268 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய 119 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 119 சந்தேகநபர்களுள் 22 பேர் வெளிநாட்டவர்களாவார்.

அத்துடன் 151 சந்தர்ப்பங்களில் 7095 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய 186 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

 

 

Exit mobile version