யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

24 66eb36e41bb99 md

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தை கடந்த அக்டோபர் 9ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

பிறந்த அன்றைய தினமே மேலதிக சிகிச்சைகளுக்காகத் தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அந்தக் குழந்தை கடந்த அக்டோபர் 21, 2025 அன்று உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அந்த விசாரணை அறிக்கையில், உடற்கூற்றுப் பரிசோதனைகளின்படி, குழந்தை குடல் இறக்கம் (Hernia) காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version