24 66eb36e41bb99 md
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

Share

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தை கடந்த அக்டோபர் 9ஆம் திகதி மந்திகை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

பிறந்த அன்றைய தினமே மேலதிக சிகிச்சைகளுக்காகத் தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அந்தக் குழந்தை கடந்த அக்டோபர் 21, 2025 அன்று உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அந்த விசாரணை அறிக்கையில், உடற்கூற்றுப் பரிசோதனைகளின்படி, குழந்தை குடல் இறக்கம் (Hernia) காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

images 7
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – லெபனான் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை அவசியம்: லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் வலியுறுத்தல்!

இஸ்ரேலுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இரு தரப்புக்களுக்குமிடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும்...

sanakkiyan
இலங்கைசெய்திகள்

“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மதுபான உரிமத்தை விற்க முயற்சி”: நாடாளுமன்றத்தில் இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து களுத்துறை மாவட்டத்திலுள்ள ஒரு...

child on oxygen
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிப்பு: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B தொற்றுகள் வேகமாக அதிகரித்து...