யுனிசெப்பின் 75 ஆண்டு கால வரலாற்றில் கொரோனா பெருந்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா குறிப்பிடுகையில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் கொரோனா பாதிப்பை ஏற்பட்டுள்ளது.
உலகில் 100 மில்லியன் குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். 60 மில்லியன் குழந்தைகள் ஏழ்மையான குடும்பச் சூழலில் சிக்கியுள்ளனர்.
23 மில்லியன் குழந்தைகளுக்கு அத்தியாவசியத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.
இந்த பெருந்தொற்று காலத்தில் பள்ளிகளில் இடைநிற்றலான குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள், திருமணத்தில் தள்ளப்பட்ட குழந்தைகள், சரியான சுகாதார வசதிகள் கிடைக்காத குழந்தைகள் காணப்படுகின்றனர்.
#WorldNews
Leave a comment