100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள 300 கொள்கலன்களில் 7,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிக தொகை சீனி காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துறைமுகத்தில் காணப்படும் சீனிக் கொள்கலன்கள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாமதக் கட்டணமாக பெருந்தொகையான பணம் செலுத்தவேண்டியேற்பட்டுள்ளதால் சீனி கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 05 இறக்குமதியாளர்களால் 5 மாதங்களுக்கு முன்னர் 400 கொள்கலன்களில், 12, 000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த சீனிக் கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் ஏற்படுள்ளதாகவும் தெரியவருகிறது.
#SrilankaNews