இலங்கையில் வெற்றுப் போத்தலை குடுத்தால் 10 ரூபாயா?

22 61dbd7ff18b22

இலங்கையில் வெற்றுப்போத்தலை கொடுத்தால் லங்கா சதோச மூலம் 10 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

புதிய குடிநீர் போத்தலை 35 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறோம். அத்தோடு லங்கா சதொச நிறுவனம் மூலம், நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் ஒரு வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்.இந்த முயற்சியின் மூலம் நாடு முழுவதும் குறைந்த விலையில் குடிநீர் போத்தல்கள் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும்.

இதன் மூலம், மற்ற குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சவால் விட நாங்கள் விரும்பவில்லை.

ஆனால், அவர்களும் இந்த போத்தல்களை மீட்டெடுக்கும் முறையைப் பயன்படுத்தினால், அது சூழலுக்கு உகந்த வணிகமாக மாறும் என்றார்.
#SrilankaNews

 

Exit mobile version