வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 73 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த முதியவரின் வீட்டில் திடீரெனத் தீ பரவியுள்ளது. இதன்போது அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகத் தெரியவருகிறது.
அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், முதியவர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். உயிருடன் மீட்கப்பட்ட அவர் உடனடியாக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தீ பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இந்தத் தீ ஏற்பட்டதா என்பது குறித்து வேயாங்கொடை பொலிஸார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.