விமான விபத்தில் மூவர் பலி! -அமெரிக்காவில் சம்பவம்!

flight

அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த நிக் பிளெட்சர், மைக்கேல் டாப்ஹவுஸ், மற்றும் வெஸ்லி பார்லி ஆகியோரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் நேற்று காலை ஏற்பட்டுள்ளது.

பாயெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘பீச் கிராஃப்ட் சி23‘ என்ற சிறியவகை விமானமே குறித்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

சார்லஸ்டனுக்கு தென்கிழக்கே 50 மைல் (80 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நியூ ரிவர் கோர்ஜ் பாலத்திலிருந்து சில மைல் தொலைவில் விமானம் திடீரென விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version