வவுனியாவில் (Vavuniya) 2021ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களினால் 58 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்துக்கள் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிடம் தகவல் அறியும் சட்டம் மூலமாக கேட்கப்பட்ட நிலையில் குறித்த தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் அறியும் சட்டம்
குறித்த தரவுகளின் அடிப்படையில் இவ்வருடத்தில் மட்டும் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதுடன் கடந்த வருடங்களை விட விபத்துக்களால் பலியானவர்களின் வீதம் அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும் கடந்த ஐந்து வருடங்களில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் இவ் விபத்துக்களினால் 8 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.