வடமராட்சியில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு!

nij3te84 dead

வடமராட்சியில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளம் ஆசிரியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயாரான இவர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியை திருமதி விஜயசங்கர் சாந்தினி (வயது-43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version