நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் இம் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2025 நவம்பர் மாதத்துக்குச் செல்லுபடியாகும் மாதாந்த (Monthly) மற்றும் மூன்று மாத காலப் (Three-Monthly) பருவச் சீட்டுகளை (Season Tickets) இம் மாதம் டிசம்பர் 7ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கால நீடிப்புச் சலுகை வாராந்தப் பருவச் சீட்டுகளுக்குப் (Weekly Season Tickets) பொருந்தாது என்பதையும் ரயில்வே திணைக்களம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.