யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) அனுமதி இன்றி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறு பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19, 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த விழாவைக் கருத்திற் கொண்டு:
பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலைகள் (Garlands), சான்றிதழ் சுருள்கள் (Scrolls) மற்றும் பரிசுப் பொருட்களைத் தனிநபர்களும் சில நிறுவனங்களும் அனுமதியின்றி விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:
பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், முறையான நடைமுறைகளின் கீழ் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல் பெற்ற பின்னரே இலச்சினையைப் பயன்படுத்த முடியும். உரிய அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்காகவோ அல்லது இதர தேவைகளுக்காகவோ இலச்சினையைப் பயன்படுத்தும் தரப்பினர் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் கௌரவம் மற்றும் தரத்தைப் பேணும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.

