MediaFile 2 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் சுடர்விட்ட தீப்பந்தப் போராட்டம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதி கோரி முழக்கம்!

Share

படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்வுப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக அமையம், மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக நினைவுத் தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அஞ்சலியைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தைச் சூழ பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினர். நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை அற்ற சூழலில், ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலின்றிப் பணியாற்ற ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...