sand mining lorries
செய்திகள்இலங்கை

புதிய தேசிய கனிமக் கொள்கை: கனரக கனிம அகழ்வு உரிமங்களுக்குத் தற்காலிகத் தடை!

Share

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Heavy Mineral Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

புதிய கொள்கை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.இல்மனைட் (Ilmenite), ரூடைல் (Rutile), சிர்கோன் (Zircon) மற்றும் கார்னட் (Garnet) போன்ற பெறுமதிமிக்க கனிம மணல்களுக்கான அனைத்து ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்கள்.

வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான மணல், கற்கள் போன்ற மூலப்பொருட்களை அகழ்வதற்கு இந்தத் தடை பொருந்தாது.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத அகழ்வுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளைக் கருத்திற்கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப உரிமம் வழங்குவதைத் தவிர்க்க, முழுமையான உரிமச் செயல்முறை (Licensing Process) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.சட்டவிரோத அகழ்வுகள் மற்றும் அரச நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்களைக் கண்காணிக்க, ஜனாதிபதியின் அனுமதியுடன் “உடனடி சுற்றிவளைப்பு பிரிவொன்று” (Rapid Response Unit) நிறுவப்படவுள்ளது.

இது தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும்.

மிரிஜ்ஜவில பகுதியில் கனிம மணல் அகழ்வுக்குத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை அமைச்சர் மறுத்தார். 2024 செப்டம்பரில் போக்குவரத்து தொடர்பான ஒரு கடிதமே வழங்கப்பட்டதாகவும், அது ஆய்வுக்கோ அல்லது அகழ்வுக்கோ வழங்கப்பட்ட முறையான உரிமம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...