பிபில – பதுளை வீதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதி 20 பேர் காயம்!

MediaFile 9 3

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) இடம்பெற்ற பாரிய விபத்தில் சிக்கி சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இப்பகுதியில் பயணித்த இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் படுகாயமடைந்த சுமார் 20 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் பிபில – பதுளை பிரதான வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து பிபில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version