பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 145 பிரிவினைவாதிகள், 17 வீரர்கள் மற்றும் 31 பொதுமக்கள் உட்பட 193 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.