ஒமிக்ரோனின் முதற் சாவு இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் திரிவுவான ஒமிக்ரோனால் ஒருவர் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே மேற்படி தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் சாவடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒமிக்ரோனை எந்த தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாதென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world