MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

Share

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வி சமித்ரி ரம்புக்வெல்ல, இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற முறையில் ஈட்டப்பட்ட பணத்தை மறைப்பதற்கும், கையாள்வதற்கும் (பணச் சுத்திகரிப்பு – Money Laundering) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், பின்வரும் நிபந்தனைகளுடன் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்:

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள்.வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...