பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.
இன்று (20) தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் அனைவரும் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் மர்ம நபர்களால் சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பாரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின் போது பத்திரிகை அலுவலகங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மீதும் கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த வன்முறைச் சூழலைப் பயன்படுத்தி, இந்து இளைஞர் ஒருவர் மர்மக் கும்பலால் எரித்து கொல்லப்பட்டமை சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என இடைக்கால அரசுத் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
7 Arrested in Connection with Burning of Hindu Youth During Bangladesh Violence; Interim Leader Muhammad Yunus Releases Suspect Details.

