யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் விஹாரை அமைந்துள்ள காணியின் உரித்து (Ownership) தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுகாண அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் நேரடித் தலையீட்டுடன், காணி உரிமம் குறித்த ஆய்வுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நீதியான தீர்மானத்தை எட்டும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாகத் தீவிரமடைந்துள்ள தையிட்டி விஹாரை காணிப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து, அப்பகுதியில் இன நல்லுறவை உறுதிப்படுத்துவதே இத்தலையீட்டின் முதன்மை நோக்கமாகும்.
நீண்டகாலமாகத் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் தரப்பினரால் இந்தக் காணி விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

