இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, தாயைத் தாக்கி ஆறு பேர் அடங்கிய குழு குழந்தையைக் கடத்தியிருந்ததாகத் தமிழகக் காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உடனடியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைத் தமிழகக் காவல்துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.