டித்வா புயல் கோரம்: பலி எண்ணிக்கை 649 ஆக உயர்வு! இன்னும் 173 பேரைக் காணவில்லை – அதிர்ச்சித் தகவல்கள்.

Dithwa Death Count

‘டித்வா’ (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 69 பேரும், கேகாலை மாவட்டத்தில் 38 பேரும் காணாமல் போயுள்ளனர்.

ஜனவரி 25 ஆம் திகதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ள அந்த நிலையம், நுவரெலியா மாவட்டத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனர்த்த நிலைமை காரணமாக 649 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 243 எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் 89 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தொடர்ந்தும் 85 பாதுகாப்பு நிலையங்களில் 6,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version