டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

Screenshot 2025 12 02 at 16.09.23.webp

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, சூறாவளி அனர்த்தத்தினால் இதுவரை 103 சிறுவர்கள் தாராதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது ஒரு பெற்றோரை இழந்ததுடன், இன்னும் சிலர் இருவரையும் இழந்து அநாதரவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது:

பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்குப் பல தரப்பினர் தாமாக முன்வந்துள்ளனர்.

எவரும் சுயமாகச் சிறுவர்களைப் பொறுப்பேற்க முடியாது. தத்தெடுக்கும் நடைமுறைகள் அனைத்தும் முறையான சட்ட விதிகளுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மகளிர் விவகார அமைச்சு இணைந்து இச்சிறுவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளன.

சிறுவர்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் குறைக்கவும், அவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வரவும் விசேட ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

Exit mobile version