பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், தவில் வித்துவான் அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த தவில் வித்துவான் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியான நிலையில், அதனை மறுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுப் பல வருடங்களாகத் தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம்.
எனவே, அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

