கொவிட் சோதனைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டால் 1917 க்கு அழைக்கவும்!!!
பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இரு பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பி.சி.ஆர். பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா எனவும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபா எனவும் வர்த்தமானியில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக் கட்டண அளவீடு நேற்று முதல் நடைமுறையில் உள்ளது.