கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் திகதி கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் முன்னிலையானார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளனர்.
இதற்காக 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.
அதன்படி, கரூருக்கு எத்தனை மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது?
கரூர் நிகழ்ச்சிக்கு காலையில் எத்தனை மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டீர்கள்?
நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது? கரூர் நிகழ்விற்கு எத்தனை மணிக்கு சென்றீர்கள்?
கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?
மேடையில் இருந்தபோது காவல்துறை அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நொடி மற்றும் நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? என்ன நடைபெற்றது?
கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு காவல்துறை உடனே உங்களை சென்னைக்கு திரும்ப அறிவுறுத்தீனார்களா?
கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் பற்றி எப்போது தகவல் கிடைத்தது? போன்ற பல கேள்விகளை கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விஜய்யிடம் 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Karur Stampede Case: Actor Vijay Appears Before CBI in Delhi; Faces 80+ Questions Over 41 Deaths.