அமெரிக்கக் குடிமக்கள் 2026ஆம் ஆண்டில் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாகப் புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்த ஆர்வம் அதிகரிக்க, மலிவான வாழ்க்கைச் செலவு, உயர்தர சுகாதார சேவை மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன.
ஆய்வில் பதிலளித்தவர்களில் 24.4% பேர் கனடாவிற்கு இடம்பெயர்வதில் வலுவான விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் (34% பேருக்கு இதுவே முக்கியக் கவலை), சுகாதாரச் செலவுகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகியவற்றால் தூண்டப்படும் அமெரிக்கர்களுக்கு, கனடாவின் அருகாமையும், கலாசார ஒற்றுமையும், உயர்தர வாழ்க்கைத்தரமும் இலகுவான தீர்வை வழங்குகின்றன.
கனடாவைத் தவிர, இடப்பெயர்வு செய்ய விரும்பும் மற்ற நாடுகளின் தரவரிசை, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் அடங்கும்.
பொருளாதார அழுத்தங்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், கனடா வழங்கும் ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்க்கைத்தரத்தின் கலவையே கனடாவை அமெரிக்கர்கள் விரும்பும் சிறந்த இடப்பெயர்வு இலக்காக மாற்றியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.