கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன தொடர்பான விசாரணையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக CID இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட 2.5 கோடி ரூபா பெறுமதியான ஹோண்டா வெசல் (Honda Vezel) கார், வில்பிரட் திசாநாயக்க என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பணத்தை சட்டத்தரணியே வழங்கியுள்ளார் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தப்பணம் எவ்வாறு திரட்டப்பட்டது என்பது குறித்து CID வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறது.
கொலையைச் செய்த துப்பாக்கிதாரிக்கு, சட்டத்தரணிகள் என்ற போர்வையில் தப்பிச் செல்ல அவர் சட்டத்தரணிகள் அணியும் 2 கழுத்துப் பட்டிகள் (Bands),சட்டத்தரணிகளின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிகாரபூர்வ இலச்சினை (Sticker), துப்பாக்கிதாரிக்குத் தேவையான போலி சட்டத்தரணி அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் வழங்கியுள்ளார்:
சந்தேகத்தை தவிர்க்க தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை ஆகிய சட்டப் புத்தகங்கள்.சந்தேகநபர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு மிகத் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

