ஐக்கிய அரபு செல்வோருக்கு கொவிட் சோதனை அவசியம்!

download 8

ஐக்கிய அரபு செல்வோருக்கு கொவிட் சோதனை அவசியம்!

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பரிசோதனைக்காக பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்துக்கு வருகைதர வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய, அங்கு செல்லும் அனைவரும் கொரோனாப் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் பணியாளர்களுக்கு, கொரோனாப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை விமான நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version