எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

MediaFile 10

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு வேறு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம். பிரேமசிறி, நவரட்ண பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மற்றொரு மனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் இந்த நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, தொடர்புடைய சசட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Former MPs Challenge Pension Abolition Bill in Supreme Court; Allege Violation of Fundamental Rights.

 

Exit mobile version