மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடும் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஜனவரி 31 அன்று அமெரிக்காவால் பகிரங்கப்படுத்தப்பட்ட 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 காணொளிகள் மற்றும் 1.8 லட்சம் புகைப்படங்களில் உலகப் புகழ்பெற்ற பலரின் இரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.
இதில் பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன், ஒரு பெண்ணுடன் அரை நிர்வாண நிலையில் இருக்கும் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.எப்ஸ்டீனுடன் மண்டேல்சன் கொண்டிருந்த ஆழமான தொடர்புகளை இந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மண்டேல்சனுக்கு உயர் பதவிகளை வழங்கியதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பீட்டர் மண்டேல்சன் கூறிய பொய்களை உண்மையாக நம்பியே அவருக்குப் பதவி வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கோருகிறேன்.
ஏற்கனவே கடந்த செப்டம்பரில் மண்டேல்சனைத் தூதுவர் பதவியிலிருந்து நீக்கியிருந்த ஸ்டார்மர், தற்போது எழுந்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.