வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து வந்து தனது வீட்டில் வளர்த்து வரும் பெண் ஒருவர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முன்னால் ஆக்ரோஷமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த சம்பவம் வலிகாமம் மேற்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், வீதியோரங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் நாய்களைப் பிடித்து வந்து, தனது சொந்தப் பணத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பராமரித்து வருகிறார்.
தற்போது அவரது வீடு ஒரு பெரும் நாய் பண்ணையாக மாறியுள்ள நிலையில், நாய்களின் சத்தம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாகத் தமக்குத் தொல்லை ஏற்படுவதாக அயலவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாய்களைப் பராமரிப்பதற்காக அவர் அமைத்துள்ள கட்டடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தப் பெண், தனது நிலைப்பாடு குறித்துக் கடும் தொனியில் பேசினார்:
அவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கடுமையான விவாதங்களையும் கிளப்பியது. எனினும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாது அவர் தனது முடிவில் உறுதியாக நின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.