இஸ்ரேலுக்கு எதிராகக் கை உயர்த்தினால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை!

CVC3HSSTGNP2HIPGMCBPZYU7N4

FILE PHOTO: Israeli Prime Minister Benjamin Netanyahu speaks during a news conference in Jerusalem, September 2, 2024. Ohad Zwigenberg/Pool via REUTERS/File Photo

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து மீட்கப்பட்ட கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியான ரன் கிவிலியின் (Ran Gvili) இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

ஹமாஸை முழுமையாக நிராயுதபாணியாக்குவதும், காசாவை இராணுவமயமற்ற (Demilitarized) ஒரு பிரதேசமாக மாற்றுவதுமே இஸ்ரேலின் பிரதான நோக்கம் என அவர் மீண்டும் வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கு எதிராக எவரேனும் கையை உயர்த்தினால், அவர்கள் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்பதை எமது எதிரிகள் தெரிந்து கொள்ளட்டும் என அவர் பகிரங்கமாக எச்சரித்தார்.

தொடங்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றி, காசாவில் இஸ்ரேல் நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காசாவில் போர் நடவடிக்கைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் இந்த உரை இஸ்ரேலின் போர் நிலைப்பாடு மாறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version