1768050634 ceb 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: சுயவிருப்ப ஓய்வு விண்ணப்பங்களை மீளப் பெற நாளை வரை அவகாசம்!

Share

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், அவற்றை மீளப் பெறுவதற்கு நாளை (ஜனவரி 30) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது:

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருந்தாலும், தற்போது அந்த முடிவை மாற்றி புதிய நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடர விரும்பும் ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கான கோரிக்கைகள் 2026 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகப் பொது முகாமையாளர் கிளைக்குக் கிடைக்க வேண்டும்.

ஜனவரி 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எவ்விதக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மின்சார சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அனைத்து பிரிவு மற்றும் கிளைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஊழியர்கள் புதிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...