MediaFile 3 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் $5 பில்லியன் வருமானம் ஈட்டி சாதனை!

Share

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக லாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தநிலையில், 024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49 வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் அது 178.29 மில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 6.76 வீதத்தினால் வளர்ச்சியடைந்து 141 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 12.95 வீத்தினால் அதிகரித்து 55.12 மில்லியன் டொலர் வருமானமாகவும் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் 4.06 வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் அது 72.8 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டு காலப்பகுதியில், மொத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2024 இல் 4.76 பில்லியன் டொலர்களாக இருந்ததுடன் ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 5.42 வீதம் வரை அதிகரித்துள்ளதுடன் அது 258.18 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும் என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...