1770083058 ELECTRICITY 6
செய்திகள்இலங்கை

இந்த மாத இறுதியில் இலங்கை மின்சார சபை கலைப்பு? மறுசீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில்!

Share

இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது அதன் இறுதி இலக்கை எட்டியுள்ளது. இதன்படி, இந்த மாத இறுதிக்குள் மின்சார சபையைக் கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியின் தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளபடி, 5 கட்டங்களாகத் திட்டமிடப்பட்ட இந்த மறுசீரமைப்பில் ஏற்கனவே 4 கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன:

தற்போது மிக முக்கியமான இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை பெப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி அறிவிக்கப்படும்.

ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு (VRS):
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2,173 ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இதில் 20 பேர் தமது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.தற்போது 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு: ஓய்வு பெறும் இவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...