PM Narendra Modi to Officiate Flag Hoisting Ceremony at Ayodhya Ram Mandir Tomorrow on 161-Foot Temple Spire.
மிகவும் பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்ற விழா நாளை (நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்தக் கொடியேற்ற விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கொடிமரத்தில் கொடியேற்ற உள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியேற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் சூரியச் சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
கொடியேற்ற விழாவையொட்டி அயோத்தி ராமர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. ராம் சர்க்காரின் அற்புதமான உருவத்துடன் கோபுரம் பிரகாசிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

