25 692fdf18ad6eb
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி: விசேட சலுகைகள் மற்றும் கால அவகாசம் அறிவிப்பு!

Share

நாட்டின்  நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம், சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், 2025.11.26 முதல் 2025.12.31 வரையான காலப்பகுதியில் எதிர்கொண்ட சம்பவங்களுக்கான இழப்பீட்டு கோரிக்கைகள் மட்டுமே இங்கு பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாகப் பெற்றோரை அல்லது சட்டரீதியான பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கு, வருமான எல்லைகளைக் கருத்திற் கொள்ளாமல் நன்மைகள் வழங்கப்படும். (இதற்கு அனர்த்தத்தினால் பெற்றோர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்).

காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட விபத்துகளுக்காக நேரடியாகப் பெறப்பட்ட சிகிச்சைகள், மருந்து கொள்வனவுகள் மற்றும் பரிசோதனைக் கட்டணங்களுக்காக ரூ. 20,000.00 வரை வெளிவாரி சிகிச்சை நன்மைகள் வழங்கப்படும்.

2025.11.01 முதல் 2025.11.26 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்களுக்கான காப்புறுதி ஆவணங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்திருந்தால், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் பேரில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பற்றுச்சீட்டுகள் சேதமடைந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிகிச்சை விபரத் துண்டுகள் (Diagnosis Card) சேதமடைந்திருந்தால், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட நோயாளியின் விபரங்கள் அடங்கிய மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனர்த்தம் காரணமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு, தற்போதுள்ள 90 நாட்கள் கால அவகாசத்துடன் மேலதிகமாக 60 நாட்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. (இது 2025.11.01 – 2025.12.31 வரையான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்).

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை இன்சூரன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத பட்சத்தில், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை கோருவதற்கு நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...