மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதன்போது அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்து உமர்கெட் தாலுகாவில் உள்ள ‘தஹாகயோன்’ பாலத்தில் செல்லும்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்துள்ளது.
குறித்த பேருந்தில் சாரதி, நடத்துனர் தவிர நான்கு பயணிகள் பயணம்செய்துள்ளனர்.
இதில் பயணித்த ஆறு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவைளை ஆறு பேரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாரதி காணாமல் போயுள்ளார். இவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.