வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டன – ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி!!!
தலிபான்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் அமைப்பு தொடர்பான காணொலிகள் மற்றும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தலிபான்களின் பதிவுகளுக்கு தடைவிதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது தலிபான்களின் வாட்ஸ்-அப் கணக்குகளும் முடக்கப்படுகின்றன என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் தலிபான்களுக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிடுவோரின் பதிவுகள் மற்றும் அவர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் போன்றவற்றை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.