வவுனியாவில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

IMG 20210818 WA0086

வவுனியாவில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமானளவு ஒட்சிசனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரத்துக்கு நாட்டை முழுமையாக முடக்கு, சுகாதாரத்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தி போராடினர்.

Exit mobile version