ட்ரோன் கமராவை , அனுமதிப்பத்திரமின்றி பறக்கவிட்ட இரு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹரகம பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மிரிஹான பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ட்ரோன் கமரா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.