24 11
செய்திகள்அரசியல்இலங்கை

கே.பி.யின் கைது மற்றும் மகிந்த-கோட்டாபயவின் டீல்: சரத் பொன்சேகாவின் பகிரங்க விமர்சனம்!

Share

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான தற்போதைய அரசியல் வாதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கே.பி.யைச் சுரேஷ் சலே தான் கைது செய்தார் என்று தற்போது சிலர் வீணான பெருமை பேசி வருவதாகச் சாடிய பொன்சேகா, உண்மையான பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தாம் முப்படைகளின் பிரதானியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விபரித்த பொன்சேகா, “மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர ரீதியாகத் தகவல் வந்ததையடுத்து, புலனாய்வுக் குழு ஒன்று அங்கு சென்று அவரை அழைத்து வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அவரைப் பொறுப்பேற்ற புலனாய்வாளர்கள், ‘இவர் கே.பி, இவரை உங்களிடம் பாரப்படுத்துகிறோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அதன் பின்னரே சி.ஐ.டியினர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்தனர்” என்று தெரிவித்தார்.

கே.பி. இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட விதம் குறித்துப் பேசிய அவர், “விமான நிலையத்திலிருந்து கே.பி. நேரடியாகக் கோட்டாபயவின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குற்றப்புலனாய்வுத் துறையில் சிறிது காலம் இருந்தபோதிலும், முறையாகச் சிறையில் அடைக்கப்படவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியமாக, கே.பி. வசம் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் நிதி குறித்துப் பேசிய பொன்சேகா, “கே.பி. வசம் இருந்த கப்பல்கள் மற்றும் புலிகளின் பணம் ஆகியவற்றிற்கு என்ன ஆனது என்பது கோட்டாபயவிற்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் கே.பியுடன் டீல் (Deal) பேசியது மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தான். அவர்கள் அவருடன் என்ன டீல் பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று பகிரங்கமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...