1748409502 water
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 22 மணிநேர நீர்வெட்டு!

Share

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (08) சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அதேபோல், கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

 

 

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...