ஆரவாரமின்றி உலாவரும் அன்னதானக் கந்தன் – தேர்த் திருவிழா
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்த திருவிழா மிக்க குறைந்த பக்தர்களுடன் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
பக்தர்கள் ஆரவாரமின்றி அன்னதானக் கந்தன் தேரில் உலாவரும் காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மிகக் குறைவான பக்தர்களுடன் மட்டும் கோவில் திருவிழாக்கள் செய்வதற்கு அனுபதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.